ஒரே தளத்திலுள்ள இரு கோடுகளை, இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் கோடானது குறுக்குவெட்டி (transversal) ஆகும். குறுக்குவெட்டியைப் பயன்படுத்தி, யூக்ளிடிய தளத்தில் இரு கோடுகள் இணையானவையா என்பதை அறியலாம்.
இரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டுக் கோடு வெட்டும்போது, உட்கோணங்கள், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட கோணங்கள் என வெவ்வேறு வகையான சில கோணச் சோடிகள் உருவாகின்றன. யூக்ளிடின் இணை மெய்கோளின்படி குறுக்குவெட்டி சந்திக்கும் இரு கோடுகள் இணைகோடுகள் எனில், அங்கு உருவாகும் உட்கோணச் சோடிகள் மிகைநிரப்பிகளாகவும், ஒத்த கோணங்கள் சமமாகவும், ஒன்றுவிட்ட கோணங்கள் சமமாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment