Saturday, 30 December 2017

நீர் மாசுபாடு

                                               நீர் மாசுபாடு                                                                
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள்ஆறுகள்கடல்கள்நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல்வேதியியல்உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும்,தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்புஅல்காப் பெருக்கம்புயல்நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓரிடமூல மாசடைதல் (Point-source pollution) எனப்படும். மற்றது, பரந்தமூல மாசடைதல்' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீர் மாசடைவதைத் தடுக்கும் முறைகள்

  1. ஊட்டப் பொருள் & உயிர்கொல்லி குறைத்தல்
  2. சாக்கடை நீரின் அளவை குறைத்தல்
  3. காடுகளை அழிப்பதனை முற்றிலும் நிறுத்துதல்
  4. எண்ணை மற்றும் பெட்ரோல் போன்ற திரவங்கள் நீரில் கலப்பதனை தடுக்க வேண்டும்
  5. பாதரசம் வெளியேற்றப்படுவதை குறைத்தல்
  6. சுரங்கத் தொழில் ஒத்திகை நிறுத்துதல்
  7. இரசாயனம் & வேதிப் பொருள் சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டை சுத்தப் படுத்துதல்
  8. கோள வெதும்பல்/புவி வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராடுதல்
.

Tuesday, 26 December 2017

கல்வி உரிமைச் சட்டம்

                               கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த – சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.
காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை(Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

Monday, 25 December 2017

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு 

கலைத்திட்டம்  ஐந்து கூறுகளை உடையது.
  1. மாணவர் மற்றும் சமுதாய தேவைகள்.
  2.  விரும்பும் குறிக்கோள்கள் 
  3. பாடப்பொருள் தெரிவு 
  4. கற்றல்-கற்பித்தல் முறைகள் 
  5. மதிப்பீடு  செய்தல் 

Sunday, 24 December 2017

ஒலி மாசுறுதல்

ஒலி மாசுபாடு 
ஒலி மாசுறுதல் (Noise pollution) என்பது மனிதன் அல்லது விலங்கின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் தீங்கு விளைவித்து இடையூறு செய்யும் இரைச்சலைக் குறிக்கிறது. வேண்டத்தகாத இந்த இரைச்சல் உலகெங்கிலும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களின் இயந்திரங்கள், தொடர் வண்டிகள் போன்ற போக்குவரத்து அமைப்பால் உண்டாகிறது . குறிப்பாக தானுந்துபேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.
உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன, தானுந்து, பேருந்துகளில் இருந்து வரும் சத்தம் மட்டும் அல்லாமல் இதில் விமானங்கள் பறப்பதாலும், ரயில் வண்டிகள் ஓடுவதாலும் விளையும் சத்தம் அடங்கும்.].குறைகள் நிறைந்த நகரத் திட்டங்களாலும் மிகுந்த இரைச்சல் காரணம் ஒலி மாசு ஏற்படுவதுண்டு, ஏன் என்றால் குடியிருப்பு கட்டிடங்கள் தொழில் செய்யும் பட்டறை கட்டிடங்கள் அருகாமையில் இருந்தால், அதனால் குடியிருப்பு பகுதிகளில் சத்தம் மிகுதியால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும்.
வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கிமின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.

Saturday, 23 December 2017

நில மாசுபாடு


நில மாசுபாடு

நில மாசுபாடு


நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும்.
நகர்புற மற்றும் தொழில்துறை திட மற்றும் திரவக் கழிவுகளை ஏடாகூடமாகக் கொட்டுதல், மண்ணில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுதல், விவசாயத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள், காடுகளை அழித்தல் போன்றவை நில மாசுபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
பெருகி வரும் நகர்புறமாதல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் நிலத்தின் இயற்கை வளங்களின் தேவை அதிகரித்தல் போன்றவற்றின் காரணமாக நில மாசுபாடு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எல்லா நாடுகளும் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விடும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
இனி இதன் காரணங்கள், இதன் விளைவுகள் மற்றும் இதற்கான தீர்வுகள் குறித்து காணலாம்.

Friday, 22 December 2017

சதுர அணி


சதுர அணி

ஒரு அணியின் நிரைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கை சமமாக இருந்தால் அந்த அணி சதுர அணி(square matrix) எனப்படும். n x n வரிசையுள்ள ஒரு அணி, n வரிசையுடைய சதுர அணி என அழைக்கப்படுகிறது. இரு சதுர அணிகளின் வரிசைகள் சமமாக இருந்தால் மட்டுமே அவற்றைக் கூட்டவும், பெருக்கவும் முடியும்.
நறுக்கம்சுழற்சி போன்ற எளிய நேரியல் கோப்புகளைக் குறிக்கச் சதுர அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக R என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும் சுழற்சி அணி; v என்பது வெளியிலமைந்த ஒரு புள்ளியைக் குறிக்கும் நிரல் திசையன் எனில், இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன் அணி Rv என்பது சுழற்சியினால் ஏற்படும் அப்புள்ளியின் புதிய நிலையைக் குறிக்கும் நிரல் திசையனாக இருக்கும். v ஒரு நிரைத் திசையனாக இருந்தால் சுழற்சியினால் ஏற்படும் புள்ளியின் புது நிலையை vRT மூலம் பெறலாம் (இதில் RT என்பது R இன் இடமாற்று அணி).

Thursday, 21 December 2017

மாணவர் மைய கற்றல்

                                                மாணவர் மைய கற்றல்
மாணவர் மைய கற்றல் என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மணவர் மையக்கற்றலின் நோக்கம் கற்பவர் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுவது.மாணவர் கைகளில் கற்கும் கற்றல் பாதை பொறுப்பு செலுத்துவதன் மூலம் கற்பவர் சுயமாக,சுதந்திரமாக பிரச்சனைகளை திறமையாக கையாள வலியுறுத்துவதை இலக்காக இம்மாணவர் மைய கற்றல் முறை விளக்குகிறது .  மாணவர் மைய கற்றல் அறிவுறுத்துவது, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் சுயமாக சிக்கலை திர்க்கும் திறன்களில் கவனம் செலுத்துகிறது.ef> Young, Lynne E.; Paterson, Barbara L. (2007). Teaching Nursing: Developing a Student-centered Learning Environment. p. 5. ISBN 078175772X.</ref> மாணவர் மைய கற்றல் கோட்பாடு மற்றும் நடைமுறையும் கற்பவரின் சிக்கல்களுக்கு ,ஆக்கப்பூர்வமான கற்கும் கோட்பாடு புதிய தகவல்கள் மற்றும் முன் அனுபவங்கள் அடிப்படையாக இருக்கிறது. மாணவர் மைய கற்றல்- மாணவர்களின் நலன்களை,முதன்முதலில் கற்கும் மாணவர் குரல் மற்றும் கற்றல் அனுபவத்திற்கு மையமாக ஒப்புக்கொள்கிறது.மாணவர் மைய கற்றல்-இடங்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்? ,எப்படி அவர்கள் கற்றுக்கொள்வார்கள்?, எப்படி தங்கள் சொந்த கற்றல் மதிப்பீட்டை மதிப்பீடுவார்கள்?. இது பழைய கற்பித்தல் முறையான ஆசிரிய மைய கற்றல் முறைக்கு மாற்றாக உள்ளது.ஆசிரிய மைய கற்றல் முறையில்,மாணவர்களின் நிலை ,"செயலற்ற" பங்காக இருந்தது.ஆனால்,மாணவர் மைய கற்றல் முறையில், மாணவர்களின் நிலை,செயல்" வரவேற்புடையதாக உள்லது.ஆசிரியர் மைய கற்றல் முறையில் பின்வருவனற்றை ஆசிரியர் முடிவு செய்வார்.மாணவர்கள் என்ன கற்றுகொள்வார்கள்?,எப்படி கற்றுக்கொள்வார்கள்?,மாணவர்களின் கற்றல் பற்றி மதிப்பீடு செய்யப்படுவார்கள்.மாறாக, மாணவர் மைய கற்றல் முறையில்,மானவர்களது கற்றல் சொந்த பொறுப்பில் பங்கேற்பாளராக மற்றும் அவர்களது சொந்த படிப்பினையும் இருக்கும்.
'மாணவர் மைய கற்றல்" என்ற சொல்லின் பயன்பாடானதுகல்வி,மனம் அல்லது வழிகாட்டல்களில் தனிப்பட்ட வேறுபாடுகளை அடையாளம் காண்பிக்கும்,வழிகாட்டுதல்களை குறிப்பதாகும். இதன் அடிப்படையில்,மாணவர் மைய கற்றல், தனிநபர்கள் கல்வி கற்கும் அனுசரனையாளரான ஒவ்வொரு மாணவர் நலன்களை,திறமைகள் மற்றும் கற்றல் பாணியை வலியுறுத்துகிறது.