சதுர அணி
ஒரு அணியின் நிரைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கை சமமாக இருந்தால் அந்த அணி சதுர அணி(square matrix) எனப்படும். n x n வரிசையுள்ள ஒரு அணி, n வரிசையுடைய சதுர அணி என அழைக்கப்படுகிறது. இரு சதுர அணிகளின் வரிசைகள் சமமாக இருந்தால் மட்டுமே அவற்றைக் கூட்டவும், பெருக்கவும் முடியும்.
நறுக்கம், சுழற்சி போன்ற எளிய நேரியல் கோப்புகளைக் குறிக்கச் சதுர அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக R என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும் சுழற்சி அணி; v என்பது வெளியிலமைந்த ஒரு புள்ளியைக் குறிக்கும் நிரல் திசையன் எனில், இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன் அணி Rv என்பது சுழற்சியினால் ஏற்படும் அப்புள்ளியின் புதிய நிலையைக் குறிக்கும் நிரல் திசையனாக இருக்கும். v ஒரு நிரைத் திசையனாக இருந்தால் சுழற்சியினால் ஏற்படும் புள்ளியின் புது நிலையை vRT மூலம் பெறலாம் (இதில் RT என்பது R இன் இடமாற்று அணி).
No comments:
Post a Comment