குறுங்கோணம்:
இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது குறுங்கோணம் ஆகும்.
எடுத்துக்காட்டு : 15°, 30°,60°,75° கோணங்கள்
விரிகோணம்:
இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கு அதிகமாகவும் 180 பாகைக்கும் குறைவாக இருந்தால் அதுவிரிகோணம் ஆகும்.
x° = விரிகோணம் எனில்:
- 90° <x° < 180° ஆக அமையும்.
நேர் கோணம்:
இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக 180 பாகையாக இருந்தால் அது நேர் கோணம். ஒரு கோணத்தின் கதிர்கள் , எதிர்க்கதிர்களாக உருவாகும்போது நேர்கோடு உருவாகிறது .
No comments:
Post a Comment