Wednesday, 29 November 2017

பின்ன கழித்தல்,பெருக்கல்

பின்ன கழித்தல்

கூட்டலைப் போன்றதே பின்னங்களின் கழித்தலும். இரு பின்னங்களைக் கழிப்பதற்கு அவற்றின் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கழிக்க வேண்டிய இரு பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், அவற்றை ஒரே பகுதி கொண்ட பின்னங்களாக மாற்றிக் கொண்ட பின் கழிக்கலாம்.
எடுத்துக்காட்டு:

 பின்ன பெருக்கல்

ஒரு பின்னத்தை மற்றொரு பின்னத்தால் பெருக்குதல்

இரு பின்னங்களைப் பெருக்குவதற்கு அவற்றின் தொகுதியைத் தொகுதியாலும், பகுதியைப் பகுதியாலும் பெருக்க வேண்டும்:

பின்னத்தை முழுஎண்ணால் பெருக்குதல்

எந்தவொரு முழுஎண்ணையும் பகுதி 1 கொண்ட பின்னமாகக் கருதலாம் என்பதால் இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போன்றதே முழுஎண்ணால் பின்னத்தைப் பெருக்குவதும்.
எடுத்துக்காட்டு:

கலப்பு பின்னங்களைப் பெருக்குதல்

கலப்பு பின்னம் (பின்னங்களை) தகா பின்னங்களாக மாற்றிக்கொண்டு இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போல இவற்றையும் பெருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:

No comments:

Post a Comment