Tuesday, 7 November 2017

செவ்வகம்

செவ்வகம்: 
செவ்வகம் (Rectangle) என்பது யூக்ளிடிய தள வடிவவியலில் அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது நான்குசெங்கோணங்களைக்கொண்ட ஒரு நாற்கரமாகும். சமகோண நாற்கரம் என்றும் இதனைக் கூறலாம். இதன் எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை; ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் செவ்வகத்தின் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. எனவே இது இணைகரத்தின் ஒரு சிறப்பு வடிவமாகும். அதாவது செங்கோணமுடைய ஒரு இணைகரமாக இருக்கும். செவ்வகத்தின் மூலை விட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது சதுரம் ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் நீள்சதுரம் என அழைக்கப்படுகின்றன[ ஒரு செவ்வகத்தின் உச்சிகள் ABCD எனில், அது Rectanglen.PNG ABCDஎனக் குறிக்கப்படும்.
இரண்டு எதிர்ப் பக்கங்கள் மற்றும் இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டதாய்த் தன்னைத்தானே குறுக்காக வெட்டிக்கொள்ளும் நாற்கரமானது குறுக்குச் செவ்வகம் (crossed rectangle) என அழைக்கப்படும்[4] குறுக்குச் செவ்வகமானது எதிர் இணைகரத்தின் ஒரு சிறப்புவகையாகும். மேலும் அதன் கோணங்கள் செங்கோணங்களாக இருக்காது, ஆனால் சமமானவையாக இருக்கும். கோள வடிவவியல், நீள்வட்ட வடிவவியல், அதிபரவளைய வடிவவியல் போன்ற பிற வடிவவியல்களில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் செங்கோணமாக இல்லாமல் அதேசமயம் சமமாகவுள்ள கோணங்களையும் கொண்ட இத்தகைய செவ்வகங்கள் உள்ளன.
                                   Rectangle Geometry Vector.svg

பண்புகள்:

  • ஒரு சமகோண நாற்கரம்
  • நான்கு செங்கோணங்கள் கொண்ட நாற்கரம்
  • குறைந்தபட்சம் ஒரு செங்கோணம் கொண்ட இணைகரம்
  • சமநீளமுள்ள மூலைவிட்டங்களைக் கொண்ட மூலைவிட்டம்
  • ABD , DCA முக்கோணங்களைச் சர்வசமமாகக் கொண்ட இணைகரம் ABCD
  • abcd அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும்,  பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.
  • abcd அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும்,  பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.

No comments:

Post a Comment