உருளை:
உருளை(cylinder) என்பது, அடிப்படை வளைகோட்டு வடிவங்களில் ஒன்றாகும். தரப்பட்ட ஒரு கோட்டுத் துண்டிலிருந்து மாறாத தூரத்தில் அமையும் புள்ளிகளால் உருவாகும் பரப்பு உருளையாகும். தரப்பட்ட அந்தக் கோட்டுத் துண்டு உருளையின் அச்சு எனப்படும். இப்பரப்பாலும் மேலும் அச்சுக்கு செங்குத்தான இரு தளங்களாலும் அடைபடும் திடப்பொருளும் உருளை எனப்படும். உருளையின் புறப்பரப்பும் கன அளவும் பண்டைக்காலத்திலேயே அறியப்பட்டிருந்திருக்கின்றன. வகையீட்டு வடிவவியலில், உருளையானது இன்னும் பரந்த அளவில், ஒரு துணையலகில் அமைந்த இணைகோடுகளின் குடும்பத்தால் நீட்டிக்கப்பட்ட, கோடிட்ட பரப்பாக வரையறுக்கப்படுகிறது. ஒரு உருளையின் வெட்டுப்பகுதி,
- நீள்வட்டமாக இருந்தால் அது நீள்வட்ட உருளை;
- பரவளையமாக இருந்தால் அது பரவளைய உருளை;
- அதிபரவளையமாக இருந்தால் அது அதிபரவளைய உருளை ஆகும்.
V = πr2h
No comments:
Post a Comment