Saturday, 4 November 2017

கோட்டுத்துண்டு

 கோட்டுத்துண்டு:

 கோட்டுத்துண்டு (Line segment) என்பது ஒரு கோட்டின் மீது அமைந்த இருபுள்ளிகளுக்கிடையேயுள்ள அக்கோட்டின் ஒரு பகுதியாகும். கோட்டுத்துண்டானது அவ்விரு புள்ளிகளுக்குமிடையே அக்கோட்டின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். முக்கோணம் மற்றும்சதுரத்தின் பக்கங்கள் கோட்டுத்துண்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பொதுவாக, ஒரு பலகோணத்தின் இருஉச்சிப் புள்ளிகள் அடுத்துள்ள புள்ளிகளாக இருந்தால் அவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டு பலகோணத்தின் பக்கமாகவும். அடுத்துள்ள புள்ளிகளாக இல்லையென்றால் பலகோணத்தின் மூலைவிட்டமாகவும் இருக்கும். கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள் வட்டம் போன்ற வளைகோடுகளின் மீது அமைந்தால் அக்கோட்டுத்துண்டானது அந்த வளைவரையின் நாண் என அழைக்கப்படும்.


                               

No comments:

Post a Comment