நீர் மாசுபாடு
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும்,தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப் பெருக்கம், புயல், நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓரிடமூல மாசடைதல் (Point-source pollution) எனப்படும். மற்றது, பரந்தமூல மாசடைதல்' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நீர் மாசடைவதைத் தடுக்கும் முறைகள்
- ஊட்டப் பொருள் & உயிர்கொல்லி குறைத்தல்
- சாக்கடை நீரின் அளவை குறைத்தல்
- காடுகளை அழிப்பதனை முற்றிலும் நிறுத்துதல்
- எண்ணை மற்றும் பெட்ரோல் போன்ற திரவங்கள் நீரில் கலப்பதனை தடுக்க வேண்டும்
- பாதரசம் வெளியேற்றப்படுவதை குறைத்தல்
- சுரங்கத் தொழில் ஒத்திகை நிறுத்துதல்
- இரசாயனம் & வேதிப் பொருள் சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டை சுத்தப் படுத்துதல்
- கோள வெதும்பல்/புவி வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராடுதல்
.