முக்கோணத்தின் நடுக்கோட்டுமையம்
ஒரு முக்கோணத்தின் ஓர் உச்சியையும் அதன் எதிர்ப்பக்கத்தின் நடுப்புள்ளியையும் இணைக்கும் நேர்கோடு அம்முக்கோணத்தின் ஓர் இடைக்கோடு அல்லது இடையம் அல்லது நடுக்கோடாகும் (median). இதேபோல் மற்ற இரண்டு உச்சிகளிலிருந்தும் நடுக்கோடுகள் வரையலாம். எனவே, ஒவ்வொரு முக்கோணத்திற்கும் மூன்று நடுக்கோடுகள் உள்ளன. சமபக்க முக்கோணங்களில் நடுக்கோடுகள், அவை வரையப்படும் உச்சிக் கோணங்களைஇருசமக்கூறிடுகின்றன. இருசமபக்க முக்கோணத்தில் சமநீளங்களைக் கொண்ட இரு பக்கங்களுஞ் சந்திக்கும் உச்சியிலிருந்து வரையப்படும் நடுக்கோடு, உச்சிக்கோணத்தை இருசமக்கூறிடுகின்றது.
No comments:
Post a Comment