குத்துக்கோடு
ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடு(Altitude) என்பது. அம்முக்கோணத்தின் ஒரு உச்சியிலிருந்து அந்தஉச்சியின் எதிர்ப்பக்கத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் கோட்டிற்கு வரையப்படும் ஒரு செங்குத்துக்கோடாகும். எதிர்ப்பக்கத்தைக் கொண்டிருக்கும் கோடானது அப்பக்கத்தின் நீட்சி எனப்படும். இந்தப் பக்க நீட்டிப்பும் குத்துக்கோடும் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குத்துக்கோட்டின் அடி எனப்படும். குத்துக்கோடு வரையப்படும் முக்கோணத்தின் உச்சிக்கும் குத்துக்கோட்டின் அடிக்கும் இடையேயுள்ள தூரம் குத்துக்கோட்டின் நீளம் எனப்படும்.
குத்துக்கோட்டின் நீளம் முக்கோணத்தின் பரப்பு காண்பதற்குப் பயன்படுகிறது. முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துக்கோட்டின் நீளம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியளவாக முக்கோணத்தின் பரப்பு அமையும்.முக்கோணவியல் சார்புகள்மூலம் குத்துக்கோட்டின் நீளமானது முக்கோணத்தின் பக்கநீளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஒரு இருசமபக்க முக்கோணத்தின் சமமில்லாத மூன்றாவது பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் அடி, அப்பக்கத்தின் நடுப்புள்ளியாக அமையும். மேலும் அந்தக் குத்துக்கோடானது அதுவரையப்பட்ட உச்சியிலுள்ளகோணத்தின் இருசமவெட்டியாகவும் அமையும்.
ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் குத்துக்கோடானது செம்பக்கத்தை p மற்றும் q அளவுகளாகப் பிரிக்கிறதென்றால்:
- இங்கு குத்துக்கோட்டின் நீளம் h.
No comments:
Post a Comment