Friday, 15 December 2017

வாழ்க்கை முறை நோய்கள்

நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை


நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததுமே அதற்கான சிகிச்சை என்ன என்பது தான் நம் எல்லோரின் கேள்வியாக இருக்கும்... ஆனால் இந்த நோயைப் பொருத்தவரை உண்மை என்னவெனில் சிகிச்சை என்பதை விட வாழ்க்கை முறை என்பதே பொருந்தும்... நம் உணவு,பழக்க வழக்கங்கள் இவைகளை சற்றே மாற்றி அமைப்பதே இந்த நோயின் அதி முக்கியமான சிகிச்சை.
நீரிழிவு நோய் ஆயுள் முழுவதும் தொடரும் நோய். இதை குணப்படுத்த இயலாது,ஆனால் கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் குறைவான உணவுகளை உட்கொண்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக,அளவாக வைத்துக் கொள்வதும்,தெடர்ந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகள் உட்கொள்வதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
பருமனான நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை பெருமளவில் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 2-4 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இன்சுலின் எதிர்ப்பை 24-72 மணி நேரங்கள் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது,அவற்றை சரியான நேரத்தில் தவறாமல் உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment