Tuesday, 12 December 2017

அனைவருக்கும் கல்வி திட்டம்

அனைவருக்கும் கல்வி திட்டம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 3.63 லட்ச பள்ளிகள் 
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (Sarva Shiksha Abhiyan) மூலம் இதுவரை நாடு முழுவதும், 3.63 லட்சம் ஆரம்பப் பள்ளிகள்  இயங்கி வருவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பிரகாஷ் ஜவடேகர்,  ”இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதே சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் நோக்கம். முக்கியமாக பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஏதுவாக கிராமப் புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களின் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள கிராமப்புறங்களில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (Kasturba Gandhi Balika Vidyalays) என்னும் பெண் குழந்தைகளுக்கான பள்ளித் திறக்கப்பட்டுள்ளது”, எனக் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment