முக்கோண மையம் (triangle center) என்பது ஒரு முக்கோணத்தின் மையம் ஆகும்.நடுக்கோட்டுச்சந்தி, செங்கோட்டுச்சந்தி, உள்வட்ட மையம், சுற்றுவட்ட மையம் ஆகியவை ஒரு முக்கோணத்தின் சில முக்கோண மையங்களாகும். இவற்றைப் பண்டையக் கிரேக்கக் கணிதவியலாளர்கள் அறிந்திருந்தனர். இப் புள்ளிகள் வடிவொப்புமையின்கீழ் மாறாத்தன்மை கொண்டவை. அதாவதுசுழற்சி, எதிரொளிப்பு ஆகிய உருமாற்றச் செயலிகளினால் இப்புள்ளிகள் முக்கோணத்தின் உச்சியிலிருந்து அமையும் இடம் மாறுவதில்லை. இதன் விளைவாக, ஒரு புள்ளியானது முக்கோண மையமாக இருப்பதற்கு மாறாத்தன்மை ஒரு முக்கியப் பண்பாகிறது.
No comments:
Post a Comment