வடிவவியலில் ஒருவட்டக்கோணப்பகுதி அல்லதுஆரைத்துண்டு (circular sector) என்பது ஒரு வட்ட வடிவ தகட்டின் இரு ஆரங்கள் மற்றும் அவ்வட்டத்தகட்டின் ஒரு வில்ஆகியவற்றால் அடைபெறும் வடிவமாகும். ஒரு வட்டத் தகடு இரு துண்டுகளாகப் பிரிக்கப்படும் பொழுது பெரிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி பெரிய வட்டக்கோணப்பகுதி என்றும் சிறிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி சிறிய வட்டக்கோணப்பகுதி என்றும் அழைக்கப்படுகின்றன. படத்தில், θ மையக்கோணம் (ரேடியன்களில்), வட்டத்தின் ஆரம், சிறிய வட்டவில்லின் நீளம்.
180° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப்பகுதி அரைவட்டம், 90° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி காற்பகுதி (quadrants), 60° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி அறுபகுதி (sextant) மற்றும் 45° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி எண்பகுதி (octant) என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
ஒரு வட்டவில்லின் இரு முனைப்புள்ளிகளை வட்டத்தின் பரிதியின் மீது அமையும் ஏதேனும் ஒரு புள்ளியுடன் இணைக்கக் கிடைக்கும் கோணத்தின் அளவு அவ்வட்டவில் வட்டமையத்தில் தாங்கும் கோணத்தில் பாதியளவாக இருக்கும்.
No comments:
Post a Comment