கலைத்திட்டம்
கல்விப் புலத்தில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. கற்றலுக்கு உரியவை எல்லாம் கலைஎனப்படுகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டம் எனலாம். முறைசார்ந்த அல்லது முறைசாரா வகையில் கல்வியை வழங்குகின்ற சகல தாபனங்களும் (பாலர் பாடசாலையாகட்டும் அல்லது பல்கலைக்கழகமாகட்டும்) தாம் வழங்குகின்ற கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக முறையான திட்டமொன்றைக் கொண்டிருக்க வேண்டியாதாகவுள்ளது. இத்தாபனங்களில் சேவையாற்றும் நபர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் இத்திட்டம் தொடர்பான போதுமான அறிவு, திறன்களைக் கொண்டிருக்க வேண்டியதும் மிக இன்றியமையாதாகும். அதாவது, கல்விப்புலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுகின்ற நபர்கள் கலைத்திட்டம் பற்றிய பரந்த விளக்கமொன்றை கொண்டிருப்பது அவசியமாகின்றது.
இந்த வகையில் இலங்கைப் பாடசாலைகளில் பல்வேறு பாடங்களை கற்பிக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களாகிய நாம், பாடசாலைகளில் அமுலாக்கப்படும் கலைத்திட்டம் தொடர்பான போதிய விளக்கங்களை கொண்டிருத்தலுடன் மாத்திரமன்றி கலைத்திட்டம் என்ற துறை தொடர்பான விளக்கங்களையும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. ஏனெனில் ஆசிரியர்களே, கலைத்திட்டத்தை செயற்படுத்தும் முகவர்களாக விளங்குகின்றனர். இலங்கையினைப் பொறுத்தவரையில், தேசிய ரீதியில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு போன்றவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் திட்டமிடப்படுகின்ற கலைத்திட்டத்தை பாடசாலைகளில் செயலுருப்பெறக் காரணமாகின்றவர்கள் ஆசிரியர்களே! எனவே, இலங்கையில் நடைமுறைபடுத்தப்படும் ஆசிரிய வாண்மைபயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் கலைத்திட்டம் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மைகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு இக்கட்டுரையில், கலைத்திட்டம் தொடர்பான சிலஅடிப்படை எண்ணக்கருக்கள் பற்றி எடுத்து நோக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment