கோண இருசமவெட்டி
ஒரு கோணத்தின் இருசமவெட்டியானது அக்கோணத்தைச் சம அளவுள்ள இரு கோணங்களாகப் பிரிக்கிறது. கோண இருசமவெட்டியின் மீது அமையும் புள்ளிகள், கோணத்தின் இரு கரங்களிலிருந்தும் சம தூரத்தில் இருக்கும்.
உட்கோண இருசமவெட்டி என்பது, 180° -க்குக் குறைவான அளவுள்ள ஒரு கோணத்தை இரு சமமான கோணங்களாகப் பிரிக்கும் கதிராகும்.(ray of a line)
வெளிக்கோண இருசமவெட்டி என்பது, அக்கோணத்தின் எதிர் கோணத்தை (180° -க்கு அதிகமான கோணம்) இருசமமான கோணங்களாகப் பிரிக்கும் கதிராகும்.
கோணத்தை இருசமக்கூறிடல்(நேர்விளிம்பு மற்றும் கவராயம் கொண்டு):
- கோணத்தின் உச்சியை மையமாகக் கொண்டு ஒரு வட்டம் வரைதல் வேண்டும்.
- இந்த வட்டம் கோணத்தின் கரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு புள்ளியில் சந்திக்கும்.
- இந்த இரு புள்ளிகளையும் மையமாக வைத்து சமமான ஆரத்தில் இரு வட்டங்கள் வரைய வேண்டும்.
- இவ்விரு வட்டங்களும் வெட்டும் இரண்டு புள்ளிகள் தீர்மானிக்கும் கோடு, கோண இரு சமவெட்டி ஆகும்.
No comments:
Post a Comment